தமிழக மாணவர்கள் தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டியில் சாதனை!

சென்னை: ஜூலை 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் சென்னை எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்று முடிந்த தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான பால் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாடு மாணவர்கள் மிகச்சிறந்த சாதனை பதிவு செய்துள்ளனர்.

இந்த போட்டிகளில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 36 அணிகள் பங்கேற்றன. இதில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர் அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர். மாணவர்களின் கடின உழைப்பும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் இந்த வெற்றிக்கு காரணம் என பள்ளித் தலைமையாசிரியர் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த சாதனை பள்ளியின் நற்பெயரை மேலும் உயர்த்தி இருப்பதாக அனைவரும் பெருமிதம் கொண்டனர்.

Share your love
Call now